அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR

மழைஇயற்கையின் வரம்

இறைவனின் கொடை !

காற்றாய் பறந்து

மேகமாய் கருவாகி

 மழையாய் தவழும்

 இயற்கையின் குழந்தை !

முத்துப் போன்ற சிரிப்பை

 முத்தாய் உதிர்த்து

 நாடு செழிக்க செய்யும்

 முத்துக் குழந்தை !

பெரியோர் முதல் சிறியோர் வரை

 செல்லமாயத் தொட்டு

கொஞ்சி விளையாடும்

 செல்வக் குழந்தை !

பயிர் பச்சை செழித்தோங்க

 பஞ்சம் பசி விலக

 இயற்கை அன்னை பெற்றெடுத்த

 அன்புக் குழந்தை !

உயிரினங்கள் வாழ

 உயிர் கொடுக்க வல்ல

 உன்னதக் குழந்தை !

மண்ணோடு மண்ணாய்

 துள்ளிக் குதித்து விளையாடும்

 செல்லக் குழந்தை !

குளம், குட்டை, நிரம்பிட

 அருவிகள் ஆர்ப்பரிக்க நடனமிடும்

 நாட்டியக் குழந்தை !

பருவங்கள் தவறாது

 ஓடோடி வந்து இன்னல் தீர்க்கும்

 இனியக் குழந்தை !

கோபம் கொண்டால் வெகுண்டெழுந்து

 உலகையே அழிக்க வல்ல

 வீம்புக்கார குழந்தை !

இயற்கையின் வரம்

இறைவனின் கொடை !